கலப்புத் திருமணம் செய்துக்கொண்ட இளம்பெண்; 4 நாளில் ஆணவக்கொலை? கொன்று எரித்த குடும்பம்!
கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலப்புத்திருமணம்
தஞ்சாவூர், பட்டுகோட்டை அருகே பூவாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன். திருப்பூரில் பணி செய்து வந்துள்ளார். அதேப் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் அங்கு பணிபுரிந்துள்ளார்.
இருவருக்கும் பழக்கமாகி காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து, இவர்களது காதலுக்கு, இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின், ஐஸ்வர்யாவிற்கு அவர்கள் சாதியிலேயே மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இளம்பெண் கொலை
இதனால், காதாலித்து வந்த இருவரும் திருப்பூரில் ஒரே வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த நிலையில் திருமணம் செய்துகொண்டனர். இதை அறிந்த பெண் வீட்டார் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து வந்து துன்புறுத்தி வந்துள்ளனர். மறுநாள் மர்மான முறையில் இறந்த ஐஸ்வர்யா உடலை குடும்பத்தினர் எரித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் ஐஸ்வர்யா ஆணவக் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.