வேறு சமூக பெண்ணுடன் திருமணம் - ஊர்க்காரர்கள் காலில் விழவைத்த கொடூரம்!
வேறு சமூக பெண்னை திருமணம் செய்தவரை ஊர்க்காரர்கள் காலில் விழவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கலப்பு திருமணம்
தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற கிராமம் உள்ளது. இதனைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனால் அவரை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கு கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் பாலமுருகன் பங்கேற்க வேண்டுமெனில், ஊர்காரர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இந்தக் கொடுமையை அவர் போலீசில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், ஊர்க்காரர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.