துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்... நீதிமன்றம் போட்ட திடீர் தடை
தமிழக அரசின் சட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
துணைவேந்தர் நியமன விவகாரம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய
10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய விடுமுறை கால அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பல்கலைக்கழகங்களை பாதுகாக்கும் நோக்குடன்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கிவிட்டது.
இடைக்கால தடை
துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் சட்டங்கள் யுஜிசி விதிகளுக்கு முரணானவை என்பதால் தான் தடை கோருகிறோம் என கூறப்பட்டது. தமிழக அரசு தரப்பில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை அவசர, அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை என குறிப்பிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை : முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் திடீர் திருப்பம் IBC Tamil
