இனி இந்த 5 ரூல்ஸை மீறினால் மட்டுமே அபராதம் - நோட் பண்ணுங்க மக்களே..
Tamil nadu
Chennai
By Sumathi
5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமீறல்
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. எனவே அதனை குறைக்கும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில், பல பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
- அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும்,
- இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்' அணியாமல் வந்தாலும் அபராதம்
- நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவதும்,
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலும் அபராதம்
- இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தாலும் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
கோட்டாபய நியமித்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கும் அநுர அரசு : குற்றம் சுமத்தும் பட்டதாரிகள் IBC Tamil