ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு? அமைச்சர் முக்கிய தகவல்

Tamil nadu DMK S. S. Sivasankar
By Sumathi May 20, 2025 10:40 AM GMT
Report

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயராது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும்,

electricity

ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால்,

தங்க நகைக்கடன்; ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் - பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

தங்க நகைக்கடன்; ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் - பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

அமைச்சர் தகவல்

அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

minister sivasankar

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும், எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.