தங்க நகைக்கடன்; ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் - பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
Gold
Reserve Bank of India
By Sumathi
தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
தங்க நகைக்கடன்
அரசு மற்றும் தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் என பெரும்பாலான இடங்களில் மக்கள் தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து எளிதில் கடன் பெற முடியும்.
கல்வி செலவு, வியாபார தேவை, மருத்துவ செலவு, அவசர தேவை என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்க நகைக்கடன் பெறுகின்றனர்.
புதிய விதிகள்
இந்த நிலையில், தங்க நகைக்கடன் சார்ந்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறை அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகள்,
- தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன்
- தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.
- தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்
- குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும். நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்
- தனிநபர்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடக்கு வகைக்க முடியும்.
- நகைக்கடனாக பெறப்படும் தங்கம் 22 காரட் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்
- நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும்
- வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம்