PF பணம் எடுக்க போறீங்களா? இனி ATM கார்டு போதும் - அமலாகும் புதிய விதி
ATMகள் மூலம் உடனடி PF பணம் எடுக்கும் வசதியை EPFO தொடங்கவுள்ளது.
EPFO கணக்கு
திட்டம் 1952ன் படி, எந்த ஒரு நிறுவனத்தில் தனி நபருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் இருந்தால், அந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் சேர்க்கப்படுகிறார்.
அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, தக்கவைப்பு படிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அவர்களது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதேபோல், முதலாளியும் சம்பளத்தில் 12 சதவீதத்தை பிஎஃப் நிதிக்கு வழங்க வேண்டும். ரூ.15,000 க்கு மேல் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு PF கணக்கு தொடங்க வேண்டும்.
இதில், PF பணத்தை இரண்டு சூழ்நிலைகளில் திரும்பப் பெறலாம். முதலில், 58 வயதில் ஓய்வு பெறும் போது பணத்தை திரும்பப் பெறலாம். இரண்டாவதாக, ஓய்வு பெறுவதற்கு முன்பு பணத்தை திரும்பப் பெறலாம். இந்நிலையில் PF பணம் எடுக்கப்படும் முறையில் புதிய அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.
புதிய விதி அமல்
இதுகுறித்து பேசியுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா, “நாங்கள் சோதனையின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம், விரைவில் EPFO கோரிக்கைகளுக்கான UPI முன்பக்கத்தை அறிமுகப்படுத்துவோம். உறுப்பினர்கள் தங்கள் EPF கணக்குகளை UPI இடைமுகம் மூலம் நேரடியாக அணுகவும், தானியங்கி கோரிக்கைகளைச் செய்யவும் முடியும்.
தகுதி இருந்தால், ஒப்புதல் செயல்முறை உடனடியாக இருக்கும், இது அவர்களின் கணக்குகளுக்கு விரைவான வரவை உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார். அதன்படி, உறுப்பினர்கள் ஏடிஎம் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், பணப் பரிமாற்றங்களுக்கு தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.
தற்போது, உரிமைகோரல் தீர்வுகள் 2-3 நாட்கள் ஆகும், ஆனால் UPI ஒருங்கிணைப்புடன், பணம் எடுப்பது சில நிமிடங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
