மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் - தமிழ்நாட்டில் 18 பேர் பாதிப்பு
மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் கொரோனா
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டது.
லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், ஊரடங்கு, முக கவசம், தடுப்பூசி என உலக நாடுகள் தீவிர முயற்சியை கையிலெடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது.
தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஹாங்காங்கில் மட்டும் ஒரே வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18 பேர் பாதிப்பு
இதில் தமிழ்நாட்டில் 18 பேரும், புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பரவும் கொரோனா வைரஸ், வீரியம் இல்லாத கொரோனா பாதிப்பு என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
