அப்படி நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன்? அழுத சினேகா - வாழ்க்கையை திசை மாற்றிய ஒரே ஃபோட்டோ!

Sneha
By Sumathi Sep 25, 2023 06:43 AM GMT
Report

நடிகை சினேகா குறித்த பல தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை சினேகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

அப்படி நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன்? அழுத சினேகா - வாழ்க்கையை திசை மாற்றிய ஒரே ஃபோட்டோ! | Interesting Information About Actress Sneha

இந்நிலையில், செய்யாறு பாலு சினேகாவின் சினிமா பயணம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேஷன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக ஒப்பந்தமானார்.

சினிமா பயணம்

இந்த படத்திற்கு புதுமுக ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று, வார பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. சினேகா அந்த பத்திரிக்கைக்கு புகைப்படத்தை அனுப்பியதை அடுத்து, சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அப்படி நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன்? அழுத சினேகா - வாழ்க்கையை திசை மாற்றிய ஒரே ஃபோட்டோ! | Interesting Information About Actress Sneha

படம் வெளியான பின் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவர் எந்த அளவிற்கு பிரபலமானாரோ அந்த அளவிற்கு கிசுகிசு, சர்ச்சையில் சிக்கினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசு பரவியது.

சினேகா நடிக்க மாட்டேன்னு சொல்லுவாங்க; காரணமே இதுதான் - பிரசன்னா ஓபன் டாக்!

சினேகா நடிக்க மாட்டேன்னு சொல்லுவாங்க; காரணமே இதுதான் - பிரசன்னா ஓபன் டாக்!

புதுப்பேட்டை படத்தில் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்று அழுத போது தனுஷ் அவருக்கு ஆறுதல் கூறி, இந்த கதாபாத்திரம் ரொம்ப நல்ல பெயர் வாங்கித் தரும் என்றார். அதே போல அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது எனத் தெரிவித்துள்ளார்.