சினேகா நடிக்க மாட்டேன்னு சொல்லுவாங்க; காரணமே இதுதான் - பிரசன்னா ஓபன் டாக்!
தனது மனைவி சினேகா குறித்து பிரசன்னா மனம் திறந்துள்ளார்.
பிரசன்னா
பாலாஜி மோகன் தயாரிப்பில் விக்னேஷ் விஜயகுமார் இயக்கத்தில் பிரசன்னா, கனிகா ஆகியோர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் Mad Company. ஆஹா ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது.
அப்போது பிரசன்னா அளித்த பேட்டி ஒன்றில், என் மனைவி படத்தில் நடிக்காததற்கு காரணம் எங்கள் குழந்தைகள் தான். எங்கள் இரண்டு பேரில் யாருக்கு படப்பிடிப்பு இல்லையோ, அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம்.
நடிக்காத காரணம்
சினிமாவில் சில நேரங்களில், தொடர்ந்து 30 நாட்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு சூழ்நிலை ஏற்படும்பொழுது, சினேகாவே வேண்டாம் என்று கூறி விடுவார்.
Mad Company படத்தில் வருகின்ற மாதிரி எனக்கு எந்த பேயும் தேவையில்லை. கடவுள் அருளால் எனக்கு எல்லா உறவும் சரியாக அமைந்திருக்கிறது. ஆனால் எனக்கு சின்ன வயதிலிருந்து தாத்தாக்கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்.
அது மாதிரி தாத்தா ஒரு உறவா அமைந்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, நடிகை சினேகா சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும் கணவர் மற்றும் குழந்தைகளிடம் இருக்கும் க்யூட் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.