அந்த ஒரே ஒரு Reel தான்..வீட்டில் சடலமாக கிடந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

Instagram Jammu And Kashmir Crime Murder
By Vidhya Senthil Dec 27, 2024 09:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 இன்ஸ்டாகிராம் பிரபலம் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா பிரபலம் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிம்ரன் சிங். 25 வயதான இவர் ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 7.5 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

வீட்டில் சடலமாக கிடந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்..

இந்த நிலையில், குருகிராமில் உள்ள அவரது வீட்டில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர். காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிம்ரன் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறந்த நாள் விழாவுக்கு சென்ற தலித் சிறுவன்.. துன்புறுத்தி சிறுநீர் கழித்த கொடூரம் - கடைசியில் நேர்ந்த துயரம்!

பிறந்த நாள் விழாவுக்கு சென்ற தலித் சிறுவன்.. துன்புறுத்தி சிறுநீர் கழித்த கொடூரம் - கடைசியில் நேர்ந்த துயரம்!

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிம்ரன் கடைசியாக டிசம்பர் 13 அன்று ஒரு ரீல்ஸை தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தற்கொலை

அதன் பிறகு எந்தவொரு பதவியும் போடவில்லை என்பது தெரியவந்துள்ளது.மேலும் அவருடன் தங்கி இருந்த நண்பரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிம்ரன் சிங் சில காலமாகவே சிம்ரன் மனமுடைந்து  இருந்துள்ளார்.

வீட்டில் சடலமாக கிடந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்..

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முழு விசாரணைக்குப் பிறகு தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.