பிறந்த நாள் விழாவுக்கு சென்ற தலித் சிறுவன்.. துன்புறுத்தி சிறுநீர் கழித்த கொடூரம் - கடைசியில் நேர்ந்த துயரம்!
பிறந்த நாள் விழாவில் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்ட தலித் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலித் சிறுவன்
இந்தியாவில் ஜாதி தொடர்பான வன்முறைகள் சம்பவங்கள் மூலம் அதிகமாக நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சொல்லவே தேவை இல்லை. இதற்காகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் சாதிப் பாகுபாடு துன்புறுத்தலுக்கு உள்ளான தலித் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம், குஷிப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஆதித்யா என்ற சிறுவனைக் கடந்த டிசம்பர் 20 அன்று பிறந்த நாள் விழாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அழைத்துள்ளனர்.
அந்த விழாவுக்கு ஆதித்யா சென்றதாகத் தெரிகிறது.அப்போது ஆதித்யாவை நிர்வாணப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவன் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அதன் பிறகு வீட்டிற்கு வந்த ஆதித்யா கதறி அழுதுள்ளார். தனக்கு நேர்ந்த சம்பவத்தை எண்ணி மன உளைச்சலிலிருந்துள்ளார்.
தற்கொலை
இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் ஆதித்யாவைத் துன்புறுத்தினர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த ஆதித்யா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.