பழுதான செல்போன் டிஸ்ப்ளே..2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து தாய் செய்த கொடூரம் - நடந்தது என்ன?

Chennai Crime Murder
By Vidhya Senthil Dec 22, 2024 01:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை 

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் -திவ்யா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் முடிந்த நிலையில் 4.5 வயதில் ஒரு மகனும் , 1.5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து தாய் செய்த கொடூரம்

இதனால் திவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று திவ்யா தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அறைக்கும் சென்று உள் பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டுள்ளார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பெண்ணுறுப்பில் கம்பியை வைத்து..உச்சகட்ட கொடூரம்!

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பெண்ணுறுப்பில் கம்பியை வைத்து..உச்சகட்ட கொடூரம்!

வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது அத்தை அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.அப்போது திவ்யா மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 கொலை

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது ஒன்றரை வயது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து தாய் செய்த கொடூரம்

மேலும் திவ்யாவின் செல்போன் டிஸ்ப்ளே பழுதாகி இருப்பதால் அதைச் சரி செய்து கடைசியாக அவர் யாருடன் செல்போன் பேசினார் என்பது குறித்த விவரங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.