பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் - தாய்லாந்து அரசு அதிரடி

Thailand
By Nandhini Jul 13, 2022 07:42 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நாளுக்கு நாள் பாலியல் குற்றம் அதிகரித்து வருவதால் தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. 

ராசயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து அரசு நிறைவேற்றியுள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு இடையில் தாய்லாந்து சிறைகளிலிருந்து வெளியேறிய 16 ஆயிரம் பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சிறைக்கு சென்று வெளியே வந்து மீண்டும் இந்த குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகுளுக்கு இந்த மசோதாவின் கீழ் அவர்களுக்கு இந்த ரசாயன ஊசிகள் செலுத்தப்படும் என்று தாய்லாந்து அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் - தாய்லாந்து அரசு அதிரடி | Injection Government Of Thailand

யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் அழகிய புகைப்படங்களை ‘ஜேம்ஸ் வெப்’ பூமிக்கு அனுப்பியது - வைரலாகும் வீடியோ