யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் அழகிய புகைப்படங்களை ‘ஜேம்ஸ் வெப்’ பூமிக்கு அனுப்பியது - வைரலாகும் வீடியோ
ஜேம்ஸ் வெப்
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கி இருக்கிறது. இந்த தொலைநோக்கிற்கு 'ஜேம்ஸ் வெப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப்
இந்நிலையில், 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்து ஒரு விண்மீன்-பதிக்கப்பட்ட படத்தைப் பார்த்த பிறகு, நாசா அதிகாரிகள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியிலிருந்து தங்கள் ஆரம்ப காட்சிப் பெட்டியை வெளியிட கூடினர்.
பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஹப்பிளுடன் ஒப்பிடும்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் முழு-வண்ண, உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், முன்பை விட அதிக தூரம் பார்க்க வடிவமைக்கப்பட்டுள்ளன, இது வானியல் ஆய்வின் புதிய சகாப்தத்தை குறிக்கும் மைல்கல் என்று நாசாவால் பாராட்டப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து புகைப்படங்கள் வெளியானதால் கால்கேரி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரமிக்க வைக்கும் முதல் அறிவியல் படங்கள் தொகுப்பு இதோ -
LOOK: NASA unveiled 4 new images captured by the James Webb Space Telescope ? https://t.co/1uZcjCU2iS pic.twitter.com/HSGlbVr8vR
— Bloomberg Quicktake (@Quicktake) July 13, 2022
ICYMI: NASA has released the first full-colored images from the James Webb Space Telescope.
— Bloomberg Quicktake (@Quicktake) July 13, 2022
Here's what's next ? #JWSC #UnfoldTheUniverse https://t.co/QPSJZIFZgz pic.twitter.com/TWLtEYIU7b
After a sneak peek of a galaxy-studded image from deep in the cosmos, NASA officials gathered to unveil more of their initial showcase from the James Webb Space Telescope https://t.co/VODIqdxeFG pic.twitter.com/9AIQTPPlWu
— Reuters (@Reuters) July 13, 2022
Breathtaking images of deep space taken by the James Webb Space Telescope orbiting almost 1 million miles from earth were unveiled by NASA https://t.co/yjT2X4svqj pic.twitter.com/2jPiQ0ZHPS
— Reuters (@Reuters) July 13, 2022
வேலை தருவதாக கூறி பலாத்காரம் செய்த பாஜக முக்கிய நிர்வாகி - நேரடியாக Facebook Liveவில் வெளியிட்ட பெண்