அடிக்கப் பாய்ந்த பயணிகள்; விமானப் பணிபெண்கள் செயல் - குவியும் பாராட்டு
தாமதமானதால் பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான தாமதம்
மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமான ஊழியர்களிடம் சில பயணிகள் கடுமையாக சண்டையிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.
தொடர்ந்து, இண்டிகோ விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக பயணிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பயணிகள் ஆதங்கம்
எனவே, இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமானப் பணிப் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பயணிகள் அடிப்பது போல வந்து கேள்விகளை எழுப்பிய போதும், விமானப் பணிப் பெண்கள், தங்களின் பொறுப்பை உணர்ந்து,
Kalesh b/w Indigo Ground Staff and Passengers over Flight Delayed at Mumbai Airport
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 28, 2024
pic.twitter.com/IeTygiJHA2
அமைதியுடன், பொறுமையாக பயணிகளின் சந்தேகங்களும், கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த செயல்களை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.