பயணிகள் செய்த காரியம்; இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம் - என்ன நடந்தது?
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புகார்
கோவாவிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக மும்பையில் தரையிறங்கியுள்ளது.
அப்போது விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவு உண்டனர். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் மீது புகார் எழுந்தது.
அபராதம்
மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் தரப்பில் அளிக்கப்பட விளக்கம் திருப்தி அளிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் ரூ.1.2 கோடியும், மும்பை விமான நிலைய நிர்வாகம் ரூ.30 லட்சமும் அபராதமாக செலுத்தும்படி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.