குழந்தைக்கெல்லாம் உணவு தர முடியாது : இண்டிகோ விமான ஊழியரின் அலட்சியம்.. வெடித்த சர்ச்சை

By Irumporai Jun 22, 2022 06:21 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரபல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் , தனது 6 வயது மகளுக்கு விமான ஊழியர்கள் உணவு தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். டாக்டர் OBGYN என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ

அப்போது அவருடன் பயணித்த 6 வயதான அவரது மகளுக்கு பசி ஏற்படவே அழத்தொடங்கியுள்ளார். உடனே விமான ஊழியர்களிடம் , தனது குழந்தைக்கு பசிக்கிறது ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள் , அதற்கான விலையை நான் செலுத்தி விடுகிறேன் என கூறியிருக்கிறார்.

ஆனால் வாடிக்கையாளருக்குதான் முதலில் சேவை என அங்கிருந்த ஊழியர்கள் கூறியதாகவும் ,கடைசி வரை அழுத தனது மகளுக்கு உணவு யாரும் தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். OBGYN- ன் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் அந்த நபரின் பதிவுக்கு பதிலளித்துள்ளது.

குழந்தைக்கு உணவு கொடுக்க மறுத்த விமான நிறுவனம் 

அதில் நீங்கள் சந்தித்த பிரச்சினையினை எங்களால் உணரமுடிகிறது , உங்களின் குழந்தை நலமாக இருப்பார் என நம்புகிறோம். இது தொடர்பாக நாங்கள் உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு தொடர்புகொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

தற்போது OBGYN- ன் ட்விட்டர் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் குழந்தைகளை பயணத்திற்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள் உணவினையும் சேர்த்து முன்பதிவு செய்திருக்கவேண்டும் , அல்லது சில உணவு பண்டங்களை நீங்களே எடுத்து சென்றிருக்க வேண்டும் என சற்று கோபமாக கேட்டு வருகின்றனர்.

இண்டிகோ நிறுவனம் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது முதன் முறை அல்ல ஏற்கனவே மற்று திறனாளி நபர் ஒருவருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் முன்னதாக இதே போன்றதொரு சம்பவத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு DGCA 5 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.     

உழைப்பால் ரசிகர்களின் இதயத்தை தொட்ட தளபதி விஜய்க்கு இன்று 48-வது பிறந்தநாள் - கொண்டாடும் ரசிகர்கள்