ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு மேல் சம்பளம் - இதுதான் அந்த டாப் 5 வேலைகள்!
ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறும் பணிகள் குறித்து பார்ப்போம்.
அதிக ஊதியம்
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. சிக்கலான தரவுத் தொகுப்புகளை பகுப்பாய்வு செய்கின்றனர். இதன் மூலம் 10-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.
AI தொடர்ந்து பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், வேலை வாய்ப்புகள் அதிகளவில் இதற்கு உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 10-12 லட்சம் ரூபாய் வரை இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் என்ற நம்பிக்கையில், பிளாக்செயின் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த துறையில் உள்ளவர்கள் சராசரியாக 8-12 லட்சம் ரூபாய் சம்பளம் பெறக்கூடியவர்களாக உள்ளனர்.
மேலாண்மை ஆலோசகர்கள் வணிகங்களின் செயல்திறன் மற்றும் உத்திகளை மேம்படுத்துவதில் ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதில் அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்து ரூ.10 முதல் 20 லட்சம் சம்பளம் பெறுவார்கள்.
முதலீட்டு வங்கியாளர்கள் கையில் தான் நிதி பரிவர்த்தனைகளைக் கையாளும் பொறுப்பு உள்ளது. சராசரி சம்பளம் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது.