பிரதமர் நரேந்திர மோடி சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளியான சம்பள லிஸ்ட்
உலகில் அதிக வருமானம் பெறும் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. பல நிறுவனங்களில் பணியாற்றும் சிஇஓ-க்கள் வாங்கும் சம்பள தொகையுடன் ஒப்பிடும் போது அதிபர்கள் மற்றும் பிரதமர்களின் சம்பளம் குறைவாக உள்ளது.
இந்த செய்தி தொகுப்பில் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் பெரும் சம்பள தொகை விவரங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.
முதல் இடத்தில் சிங்கப்பூர் பிரதமர்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங், உலக அளவில் அதிக வருமானம் பெறும் முதல் தலைவராக இருக்கிறார். இவர் ஆண்டுக்கு சுமார் $1.6 மில்லியன் சம்பளம் பெறுகிறார்.
2வது இடத்தில் ஹாங்காங்க் பிரதமர்
சிங்கப்பூருக்கு பிரதமருக்கு அடுத்தப்படியாக ஹாங்காங்கின் பிரதமர் கேரி லாம் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ஆண்டுக்கு சுமார் $672,000 சம்பளம் பெறுகிறார்.
3ம் இடத்தில் சுவிட்சர்லாந்து அதிபர்
3வது இடத்தில் அதிக சம்பாதிக்கும் நபராக சுவிட்சர்லாந்து அதிபர் இக்னாசியோ காசிஸ் இருக்கிறார். இவர் ஆண்டு தோறும் சுமார் $483,000 சம்பாதிக்கிறார்.
4வது இடத்தில் ஜோ பைடன்
4வது இடத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருக்கிறார். அவர் ஆண்டு சம்பளமாக $400,000 பெறுகிறார். அவருக்கு கூடுதலாக $50,000 அவரது ஆடம்பர வசதிக்கும் பாதுகாப்பிற்கும் செலவு செய்யப்படுகிறது.
5ம் இடத்தில் ஆஸ்திரேலியா பிரதமர்
ஐந்தாவது இடத்தில் அதிக ஊதியம் பெறும் உலகத் தலைவர்களில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இருக்கிறார்.
12வது இடத்தில் ஜஸ்டின் ட்ரூட்டோ
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ ஆண்டு தோறும் $267,000 சம்பளம் பெறுகிறார். உலகின் சிறந்த ஊதியம் பெறும் தலைவர்களின் பட்டியலில் 12வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆண்டு தோறும் சம்பளமாக $186,685 பெறுகிறார். இவர் உலகின் 222வது பணக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த அளவு ஊதியம் பெறும் தலைவர்கள்
உலகில் சில பிரதமர் மற்றும் அதிபர்கள் குறைந்த அளவு சம்பளம் பெற்று வருகின்றனர். அதன்படி லாவோஸ் ஜனாதிபதி $1,630 சம்பளமாக பெறுகிறார்.
கியூபாவின் ஜனாதிபதி, மிகுவல் தியாஸ்-கேனல் $360 சம்பளம் பெறுகிறார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆண்டு தோறும் $2500 மற்றும் எம்பிக்கான சம்பளத்தையும் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.