ஈஃபிள் கோபுரத்தை விட உயரம்; வரப்போகும் உலகின் மிக உயரமான பாலம் - அதுவும் இந்தியாவில்..

Jammu And Kashmir
By Sumathi Apr 09, 2024 01:30 PM GMT
Report

உலகின் மிக உயரமான ரயில் பாலம் தொடர்பான தகவல் குறித்து தெரிந்து கொள்வோம்.

செனாப் பாலம்

ஜம்மு காஷ்மீரில் கத்ரா-பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

chenab-bridge

செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர். இந்த உயரம் பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம். இந்த பாலம் கட்ட 93 அடுக்குப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பதி போறீங்களா? ரூ.50தான் - ரயில் நிலையத்தில் இதை நோட் பண்ணுங்க..

திருப்பதி போறீங்களா? ரூ.50தான் - ரயில் நிலையத்தில் இதை நோட் பண்ணுங்க..


கொங்கன் ரயில்வே

ஒவ்வொரு அடுக்குப் பிரிவின் எடை 85 டன்கள். இந்த பாலம் வெடிப்பு மற்றும் நிலநடுக்கத்தை எதிர்க்கும் என்றுக் கூறப்படுகிறது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டது.

ஈஃபிள் கோபுரத்தை விட உயரம்; வரப்போகும் உலகின் மிக உயரமான பாலம் - அதுவும் இந்தியாவில்.. | Indias Tallest Railroad Chenab Bridge Details

இதில், ஐஐடி, டிஆர்டிஓ, இந்திய புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் பங்களித்துள்ளன. 111 கி.மீ. நீளமுள்ள கத்ரா-பனிஹால் பகுதி தயாரானவுடன்,

இந்தப் பாலம் ரயில்களின் இயக்கத்திற்காக இந்த ஆண்டே திறக்கப்படலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் கட்டுமான செலவு ரூ.14,000 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.