திருப்பதி போறீங்களா? ரூ.50தான் - ரயில் நிலையத்தில் இதை நோட் பண்ணுங்க..
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து செல்கின்றனர்.
லவுஞ்ச் ‘அதிதி’
திருப்பதி ரயில் நிலையத்தில் பக்தர்களுக்கு இந்திய ரயில்வே பல வசதிகளை வழங்குகிறது. இதில் ரயில் நிலையத்தில் 5 நட்சத்திர ஓய்வறை உள்ளது. இந்த சொகுசு லவுஞ்ச் ‘அதிதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு வெவ்வேறு நேரங்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் உள்ளன. அதற்கேற்ப கட்டணத்தைச் செலுத்தி பயணிகள் இந்தச் சேவைகளை பயன்படுத்தலாம்.
கட்டண விவரம்
முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 + ஜிஎஸ்டி. 2 மணிநேரத்திற்கு கட்டணம் ரூ.100 + ஜிஎஸ்டி, 3 மணி நேரத்திற்கு ரூ.150 + ஜிஎஸ்டி, 4 மணி நேரத்திற்கு ரூ.200 + ஜிஎஸ்டி, 5 மணி நேரத்திற்கு ரூ.250 + ஜிஎஸ்டி மற்றும் 6 மணி நேரத்திற்கு ரூ.300 + ஜிஎஸ்டி ஆகும்.
இந்த ஓய்வறை 24 மணி நேரமும் திறந்திருக்கும். சீக்கிரம் வரும் பயணிகள் பிளாட்பாரத்தில் காத்திருக்காமல் ஓய்வறையில் காத்திருக்கலாம்.
இங்கு ஏசி, சாய்வு அறைகள், சொகுசு சோஃபாக்கள், சிற்றுண்டிகள், உணவுப் பொருட்கள், பானங்கள், இன்டர்நெட், செய்தித்தாள்கள், டிவி போன்ற வசதிகள் கிடைக்கும்.