9 கி.மீ வேகத்தில் 250 பாலங்களை கடந்து செல்லும் ரயில் - எங்கு இருக்கு தெரியுமா?
இந்தியாவின் மிக மெதுவாக செல்லும் ரயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில்
இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் ஜட் வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில்கள் , பாதாள ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் ரயில்கள் போன்ற ரயில்கள் பயணத்தின் போது மக்களுக்கு வசதியாக உள்ளது.
ஆனால் மெதுவாகச் செல்லும் ரயில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது ஆச்சர்யமாக உள்ளது. இந்த ரயில், தமிழகத்தின் நீலகிரி மலையில் இயங்கும் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இரு சுற்றுலா நகரங்களுக்கும் இடையே இயங்கும்.
நீலகிரி
இந்த ரயில், சராசரியாக மணிக்கு 9 கி.மீ வேகத்தில் செல்கிறது. 46 கி.மீ. தூரத்தைக் கடக்க 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இந்த ரயில் செல்லும் மேட்டுப்பாளையம் , ஊட்டி ,நீலகிரி மலை ரயில் பாதைகளில் செல்கிறது.ஏன் வென்றால், இந்த வழித்தடத்தில் ரயிலை மிக குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.
இதனால் தான் இந்த ரயில் மெதுவாக இயக்கப்படுகிறது. மேலும், இந்தப் பயணத்தின் போது, மொத்தம் 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் 208 ஆபத்தான வளைவுகள் வழியாக ரயில் கடந்து செல்கிறது.