Apple Watch கொடுத்த அலெர்ட்.. நூலிழையில் உயிர் தப்பிய நபர் - நெஞ்சை உலுக்கும் காட்சி!
தொழில் அதிபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Last9.io நிறுவனத்தின் நிறுவனர் குல்தீப் தங்கர் கலிபோர்னியா 1-5 நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார். அப்போது சாலையில் வாகனங்களுக்கு இடையே குல்தீப் தங்கரின் கார் வேகமாக சென்றுள்ளது.
அந்த சமயத்தில் காரின் முன் பக்கம் எதிர்பாராத விதமாக முற்றிலும் உடைந்து நெடுஞ்சாலையின் நடுவில் நின்றது. இதனால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் குல்தீப் தங்கர் பயன்படுத்திய ஆப்பிள் வாட்ச் கார் விபத்துக்குள்ளானதை அறிந்து அவசர சேவையால் தானாகவே இயக்கப்பட்டது.
ஆப்பிள் வாட்ச்
அதுமட்டுமில்லாமல் , கார் விபத்து நடந்த இடம் , லைவ் லொகேசன் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. இந்த தகவல் கிடைத்ததும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து குழுவினர் 15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதனையடுத்து நெடுஞ்சாலையின் நடுவிலிருந்த வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டது.இதனையடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இவை அனைத்தும் ஆப்பிள் வாட்ச் மூலம் நடந்ததாக குல்தீப் தங்கர் தனது எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.