ரூ.6000 கோடி மதிப்பில் 36 மாடிகள், ஜிம்; இந்தியாவின் விலையுயர்ந்த வீடு - யாருடையது தெரியுமா?
இந்தியாவின் இரண்டாவது விலையுயர்ந்த சொகுசு குடியிருப்பு யாருடையது தெரியுமா?
சொகுசு குடியிருப்பு
நாட்டின் இரண்டாவது விலையுயர்ந்த சொகுசு குடியிருப்பு ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கவுதம் சிங்கானியாவின் வீடு. இது மும்பையின் ஆல்ட் மவுண்ட் சாலையில் அமைந்துள்ளது.
சிங்கானியாவின் ஜேகே ஹவுஸ் பார்க்கிங் உட்பட 36 தளங்களைக் கொண்டுள்ளது. இது கூரை மேல் இரண்டு நீச்சல் குளங்கள், ஹெலிபேட், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர் போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது.
கவுதம் சிங்கானியா
குடியிருப்பு மற்றும் வணிக இடங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஆடை வணிகத்தில் சிங்கானியா குடும்பத்தின் நூற்றாண்டு கால வரலாற்றைக் காண்பிக்கும் அருங்காட்சியகமும் இதில் உள்ளது. 16,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட வீட்டில் 20 படுக்கையறைகள் உள்ளன.
இந்த வீட்டின் மதிப்பு ரூ.6,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடுதான் இந்தியாவின் விலை உயர்ந்த வீடாக உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் 16,000 கோடி ரூபாய் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.