இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் எதெல்லாம் தெரியுமா? 3 வங்கிகளை தேர்வு செய்த ஆர்பிஐ!
இந்தியாவில் அதிக பாதுகாப்பான வங்கிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பான வங்கிகள்
அமைப்பு ரீதியாக அதிக பாதுகாப்பு மிக்க வங்கிகள் என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது.
அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி, HDFC மற்றும் ICICI ஆகிய மூன்று வங்கிகள் அமைப்பு ரீதியாக மிகுந்த பாதுகாப்பு மிக்கவை. நாட்டின் பொருளாதார அமைப்பிலும் இந்த வங்கிகள் மிக முக்கியமான பங்கை வைக்கின்றன.
ஆர்பிஐ தகவல்
இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்பட்டால் அது பொருளாதாரத்திலும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க வங்கிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
அதில், 2015 ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியும், 2016 இல் ஐசிஐசிஐ வங்கியும், 2017 எச்டிஎப்சி வங்கியும் இடம்பெற ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.