சேவிங்ஸ் அக்கவுண்டில் இந்த லிமிட்டை தாண்டாதீங்க - அப்புறம் ரெய்டு தான்!
சேவிங்ஸ் அக்கவுண்ட் குறித்த பல முக்கிய தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.
சேவிங்ஸ் அக்கவுண்ட்
வருமானத்துறை விதிகளின்படி, உங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இதற்கு வரம்பு இல்லை.
ஆனால் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அதிகமாக இருந்தால், அது வருமான வரி வரம்பிற்குள் வந்தால், அந்த வருமானத்தின் ஆதாரத்தை தரவேண்டும். மேலும், வங்கிக் கிளைக்குச் சென்று பணத்தை டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வரம்பு உள்ளது.
வருமான வரி
ஆனால் காசோலை அல்லது ஆன்லைன் மீடியம் மூலம், சேமிப்புக் கணக்கில் ரூ.1 முதல் ஆயிரம், லட்சம், கோடிகள் வரை எந்த தொகையையும் டெபாசிட் செய்யலாம். 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதனுடன் உங்கள் பான் எண்ணையும் வழங்க வேண்டும்.
ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை பணமாக டெபாசிட் செய்யலாம். மேலும், நீங்கள் தொடர்ந்து உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால், இந்த வரம்பு ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம். ஒரு நிதியாண்டில் ஒருவர் தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம்.
வருமானத்திற்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால், ரூ.10 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்யலாம். வருமான ஆதாரத்தைப் பற்றி தெரிவிக்கவில்லை என்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 60 சதவீதம் வரி, 25 சதவீதம் கூடுதல் கட்டணம் மற்றும் 4 சதவீதம் செஸ் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.