அக்கவுண்ட்'ல வந்த 9000 கோடி..அதிர்ச்சியில் ஆட்டோ டிரைவர்...டீல் பேசிய பேங்க்..!!

Tamil nadu Chennai
By Karthick Sep 21, 2023 05:36 AM GMT
Report

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9000 கோடி ரூபாய் வரவு

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகின்றார். இவருக்கு இம்மாதம் 17-ஆம் தேதி 9000 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள அவர், தனது வங்கிக்கணக்கில் உள்ள பேலன்ஸை செக் செய்துள்ளார்.

9k-crore-deposited-in-auto-driver-account

அப்போது தான் வந்த குறுஞ்செய்தி உண்மை என தெரியவந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், அந்த பணத்தில் இருந்து தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாயை அனுப்பி சோதித்துள்ளார்.

சமரசம் பேசிய வங்கி

ஆனால், அதற்குள்ள ராஜ்குமாரை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த பணத்தை உடனடியாக திரும்ப பெறுவதாகவும் ராஜ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9k-crore-deposited-in-auto-driver-account

அதன்படியே ராஜ்குமார் செலவு செய்த 21 ஆயிரம் பணத்தை திருப்பி அளிக்கவேண்டும் என கூறி, மேலும் அவருக்கு வாகன கடன் தாமாக முன்வந்து அளிப்பதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளிவந்து தற்போது வைரலாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.