இனி இந்த நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு விசா வேண்டாம் - அசத்தல் நியூஸ்!
இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய பயணம்
2023ம் ஆண்டு முதல் இந்தியர்களை இ-விசாக்கள் மூலம் ரஷ்யா அனுமதித்து வருகிறது. தற்போது சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை விசா இல்லாமல் ரஷ்யா உள்ளே அனுமத்தித்து வருகிறது.
தொடர்ந்து இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே சுமார் 28,500 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 1.5 மடங்கு அதிகம்.
இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் 2 மாதங்கள் முன்னரே ஆரம்பமாகியுள்ளன. இதற்கிடையில் இதுகுறித்து மாஸ்கோ சுற்றுலா குழுவின் தலைவர் பேசுகையில்,
விசா வேண்டாம்
இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு செல்ல அனுமதிக்கும் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து மாஸ்கோ வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்றிருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.