மணிக்கு 450 கிமீ வேகம்; உலகின் முதல் அதிவேக ரயில் - அறிமுகம் செய்த நாடு!
உலகின் அதிவேக ரயிலை சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது.
அதிவேக ரயில்
மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இதற்கு CR450 மாடல் என்று பெயரிட்டுள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட சிஆர்450 என்ற இந்த புல்லட் ரயில் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சிறப்புகள்
"சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணித்து. சிஆர் 450 புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த ரயில் நிர்ணயித்திருக்கிறது.
தற்போது செயல்பாட்டிலுள்ள மணிக்கு 350 கிமீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக சிஆர்400 புல்லட் ரயிலைவிட இதன் வேகம் அதிகமாக உள்ளது. சிஆர் 450 ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.
தாய்லாந்து, இந்தோனேசியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிவேக ரயில்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.