170 பேர் பலி; ஆனால் விமான விபத்தில் தப்பித்த 2 பேர்.. எங்கே உட்காந்திருந்தார்கள்?
179 பேர் பலியான விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர்.
விமான விபத்து
தென்கொரியா, ஜேஜு ஏர் கோ நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து முவான் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் மொத்தம் 181 பேர் இருந்தனர்.

தொடர்ந்து முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, ஓடுபாதையில் விமானத்தின் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது.
இதில் விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது. இதில் 179 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் பின் பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்பித்த 2 பேர்
அவர்கள் இருவரும் கடைசி ரோவில் அமர்ந்து இருந்தனர். இரண்டு பேருமே ஜன்னல் பக்கம் இருந்துள்ளனர். அருகிலேயே எமர்ஜென்சி கதவும் இருந்துள்ளது. இதனால் அவர்கள் எளிதாக தப்பித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 1,560 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விமானத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், ஒரு பில்லியன் டாலர் (ரூ.8,500 கோடி) இழப்பீடு கிடைக்கும். இந்த தொகையை பயணிகளின் குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்க ஜேஜு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலையை லீற்றருக்கு ரூ.170ஆக அதிகரிக்க வேண்டும்! அழுத்தம் தெரிவிக்கும் தனியார் நிறுவனங்கள் IBC Tamil
எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம் IBC Tamil