கோர விபத்தில் சிக்கிய விமானம்; 62 பேர் பலி - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

South Korea Flight Death
By Sumathi Dec 29, 2024 04:39 AM GMT
Report

விமான விபத்தில் 62 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்து 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

plane crash

இதில் 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயற்சித்தது.

பின்லாந்து ரயிலில் இந்திய குடும்பம் செய்த மோசமான செயல் - வலுக்கும் எதிர்ப்பு!

பின்லாந்து ரயிலில் இந்திய குடும்பம் செய்த மோசமான செயல் - வலுக்கும் எதிர்ப்பு!

62 பேர் பலி

அப்போது லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கோர விபத்தில் சிக்கிய விமானம்; 62 பேர் பலி - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்! | 62 Killed In South Korea Plane Crashes On Landing

இதனையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தற்போது இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.