உலகிலேயே பெண்கள் அதிகம் வேலை செய்யும் நாடு எது தெரியுமா? - வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்துக்குச் சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்வதாக ஐ.எல்.ஓ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா
இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரும் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் வேலை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நைட் ஷிஃப்ட் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
தொடர்ந்து கண்விழித்து வேலை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்.
அதுமட்டுமில்லாது மன ரீதியாகவும் பாதிப்பைக் கொடுக்கும். சமீபத்தில் புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது ஊழியர் அன்னா செபாஸ்டியன் பணிச்சுமையால் உயிரிழந்தார்.
இது குறித்து அன்னா செபாஸ்டியனின் தாயார் அனிதா எர்ன்ஸ்ட் ஆண்ட யான் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “வேலைக்குச் சேர்ந்த 4 மாதங்களில், ஓய்வின்றி உழைத்தாள் .தொடர்ந்து நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பைக் கொடுத்தது.
மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு : புதிய சட்டம் கொண்டு வந்த நாடு எங்கு தெரியுமா?
மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள். குறிப்பாக வார இறுதி நாட்களிலும் வேலை, ஓவர் டைம் பணி, ஹிப்ட் நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தபிறகும் பணியாற்றுவது உள்ளிட்ட பணிச்சுமைக்கு ஆளாகி கடைசியாக அவளே எங்களை விட்டுச் சென்றுவிட்டால்.
என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.இந்நிலையில் தான், கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்துக்குச் சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்திருப்பதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization )ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேலை நேரம்
இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் 8.5 சதவீத பெண்களும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் 20 சதவீத பெண்களும் பணியாற்றுகின்றனர். இ வர்கள் வாரத்துக்குச் சராசரியாக 56.5 மணி நேரம் வேலை செய்துள்ளனர்.
மேலும் ஆசிரியர்கள் சராசரியாக வாரத்துக்கு 46 மணி நேரம் பணி செய்துள்ளனர். மேலும் இந்தியாவில் பெண் ஊழியர்கள் பணி நேரமானது அவர்களின் வயது பொறுத்து அமைவதாகக் கூறப்பட்டுள்ளது.
வயது குறையக் குறையப் பணி நேரம் அதிகரிக்கிறது.
குறிப்பாக ஐடி / ஊடகத் துறையில் உள்ள பெண்களில் 24 வயது வரையலானோர் வாரத்துக்குச் சராசரியாக 57 மணி நேரம் பணி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.