கோடிக்கணக்கில் பணம் சுருட்டி பருப்பு கம்பெனியை காலி செய்த பெண் ஊழியர்கள் - அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் உள்ள பருப்பு கம்பெனியில் ரூ.2½ கோடி அளவிற்கு பணம் சுருட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பணம் சுருட்டல்
சென்னை திருவெற்றியூர் டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பருப்பு கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் சரண்யா,பிரதீபா மற்றும் திவ்யா ஆகிய மூன்று பேரும் ஊழியர்களாக பணியாற்றி கணக்கு பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் ரூ.2 கோடியே 50 லட்சம் அளவிற்கு பனத்தை சுருட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கைது
இதனைத் தொடர்ந்து மெற்க்கொள்ளப்பட்ட விசாரணையில்,சரண்யா, பிரதீபா, திவ்யா ஆகிய மூவரும் ரூ.2½ கோடி பனத்தை சுருட்டியது கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் அவர்களில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திவ்யா நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை. அவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் பணம், 197 பவுன் நகைகள், ஒரு கார், 6 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.67 லட்சம் வங்கி வைப்புத்தொகை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.