மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு : புதிய சட்டம் கொண்டு வந்த நாடு எங்கு தெரியுமா?
மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு என்ற புதிய சட்டத்தை ஸ்பெயின் நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது.
ஸ்பெயின் புதிய அறிவிப்பு
பாலின சமத்துவத்தை முன்னிறுத்தி உலகின் பல்வேறு பெண்கள் கல்வி மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பிற்கு பல்வேறு நலத்திடங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றுடன் பெண்கள் சுகாதார நலனையும் ஒருங்கிணைத்து பேறு காலம் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்கும் நடைமுறையை சில உலக நாடுகள் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன அந்த வகையில் ஐரோப்பாவில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் நாடாக ஸ்பெயின் தற்போது இடம்பெற்றுள்ளது.
மாதவிடாய் காலத்தில் விடுப்பு
இந்த அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மாதவிடாய் காலத்தில் 3 நாள்கள் விடுப்புடன் கூடிய விடுமுறைக்கான மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 185 பேரும் எதிராக 154 பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து இந்த மசோதா பெரும்பான்மையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு சட்டம் அமலுக்கு வந்தது.
தேவைப்பட்டால் பெண்கள் 3 நாள் விடுமுறையை 5 நாள்களாக நீடித்துக் கொள்ளலாம் எனவும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகள் நீண்ட காலமகவே இந்த மாதவிடாய் விடுப்பு சட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.