அப்ரிடி இல்லை; அந்த ஒரு பவுலரிடம் ரோஹித், கோலி தப்பிக்கனும் - இந்தியாவுக்கு எச்சரிக்கை!
இந்திய அணி நசீம் ஷாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதில், இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் ஸ்பின் வலிமையாக உள்ளது. பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் கூட்டணி பலமான பவுலிங் கூட்டணி.
நசீம் ஷா
ஷாகின் அப்ரிடி மட்டும் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால், நசீம் ஷாவை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனை. அவரின் பந்துகளுடன் எளிதாக 145 கிமீ வேகத்தில் வீசுவதில் எந்த நேரத்தில் விக்கெட் கிடைக்கும் என்று கணிக்க முடியாது.
உதாரணமாக நியூசிலாந்து போட்டியில் வில்லியம்சன் விக்கெட்டை நசீம் ஷா வீழ்த்தியது மறக்கமுடியாத ஒன்று. இதனால் இந்திய அணி ஷாகின் அப்ரிடி மற்றும் நசீன் ஷா இருவரிடமும் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது.