சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வென்றால் பரிசு எவ்வளவு தெரியுமா? 50% அதிகரிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பரிசு தொகை குறித்து தெரிந்துக்கொள்வோம்.
சாம்பியன்ஸ் கோப்பை
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் நடத்தும் இத்தொடரில், இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான், தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு தோல்வியடைந்தது. இந்தத் தொடரில், இரு பிரிவுகளாக நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
பரிசு தொகை
குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம். குரூப் பி: தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், 2008 ஆம் ஆண்டை விட இந்த முறை பரிசுத் தொகை 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிக்கு $2.24 மில்லியன் பரிசு. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு $1.12 மில்லியன். அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா $560,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.