திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சாஹல் தனது மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்துள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2020ஆம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வந்ததால், பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ ஜோடி விவாகரத்து கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
விவாகரத்து
இருவருக்கும் இடையே இணக்கம் இல்லாததால் கடந்த 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததால், தற்போது பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுள்ளனர்.
முன்னதாக தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல சாஹல் வசீகரமாக இல்லை என்று தனஸ்ரீ நினைத்தார்.
இவருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாகவும், வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாகவும் புகார்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.