சாம்பியன்ஸ் டிராபியை வெல்லப் போவது இந்த அணிதான் - இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா?
எந்த அணிக்குக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
சாம்பியன்ஸ் ட்ராபி
வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
வங்கதேசம் அணி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லுமா என்பதில் சந்தேகமுள்ளது.
இங்கிலாந்து இந்திய அணிக்கு எதிராகவும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று மூன்றிலும் தோல்வி அடைந்தது. எனவே, கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறைவுதான். இந்திய அணியின் பேட்டிங் வரிசை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது பலமாகவே உள்ளது.
வேகப்பந்து வீச்சில் பலவீனமாகதான் உள்ளது. அந்த ஒரு இடம் சிக்கலை ஏற்படுத்தும். எனவே கோப்பை வெல்லும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் வென்றது. சொந்த மண்ணில் விளையாடுவதாலும் அந்த அணிக்குச் சாதகங்கள் உள்ளன.
எந்த அணி?
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிகளில் முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் 5 பேர் அணியில் இடம் பெறவில்லை.
சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறாத இலங்கை அணியிடம் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்தது. குரூப் சுற்றில் சிறப்பாக செயல்பட்டால் அதன் பின் நாக் அவுட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.
இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா / ஆப்கானிஸ்தான். இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடினால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.