இந்திய கொடியை மைதானத்தில் ஏற்றாதது ஏன்? - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்

Indian Cricket Team Pakistan national cricket team ICC Champions Trophy
By Karthikraja Feb 17, 2025 06:00 PM GMT
Report

இந்திய கொடியை மைதானத்தில் ஏற்றாதது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராஃபி

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாட உள்ளது.  

champions trophy 2025

இந்தியா அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய கொடி புறக்கணிப்பு

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நாட்டின் கொடியை தவிர்த்து தொடரில் பங்கேற்கும் மற்ற 7 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

india flag champions trophy

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்துள்ளதால் பாகிஸ்தான் இதை வேண்டுமென்று செய்துள்ளதாக இந்தியா ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் விளக்கம்

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் நிர்வாகம், "பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால் தான் இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை. இந்திய அணியை புறக்கணிக்கும் எந்த ஒரு எண்ணமும் எங்களுக்கு இல்லை.  

போட்டிகள் நடைபெறும் நாளன்று மைதானத்தில் 4 கொடிகள் மட்டும் இருக்க வேண்டுமென ஐசிசி அறிவுறுத்தியுள்ளதால், தொடரை நடத்தும் பாகிஸ்தான், தொடரின் ஏற்பாட்டாளர் ஐசிசி, போட்டிகளில் விளையாடும் இரு அணிகளின் கொடிகள் மட்டுமே இருக்கும்” என தெரிவித்துள்ளது.