முதல் வகுப்பில் பயணிக்கலாம் - ரயில்வேயின் இந்த ட்ரிக்ஸ் தெரியுமா?
ரயிலில் முதல் வகுப்பில் எப்படி ஈஸியா பயணிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ரயில்வே விதிகள்
நாட்டில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கில் அதில் தான் பயணிக்கின்றனர். ஆனால், பலருக்கு ரயில்வே விதிமுறைகளின் பலன் கொடுக்கும் பல தகவல்கள் குறித்து அறிந்திருக்கமாட்டார்கள்.
அந்த வகையில், தாய் தனது மகனுடன் முதல் வகுப்பு ஏசியில் குறைந்த டிக்கெட்டில் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் மனைவிக்கு ஏசி முதல் வகுப்பில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகியுள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
ஏசி வகுப்பு
உங்களுக்கும், உங்களது மகன் அல்லது மகளுக்கு 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. ஆனால், மகன் அல்லது மகள் அவரது தாயுடன் ஏசி முதல் வகுப்பில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையில் பயணம் செய்யலாம்.
ஆனால் குழந்தை 12 வயதுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.