ரயில் பயணிகளுக்கு இப்படியொரு வசதியா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..
ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான சலுகைகள் குறித்து தெரியுமா?
டிக்கெட் புக்கிங்
ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் இப்போது ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். டிக்கெட் புக்கிங் செய்யும் போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று தேர்வு செய்யும் வசதி உள்ளது.
அதாவது, ஸ்லீப்பர், ஏசி போன்ற பிரிவுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். அதேபோல, ஜன்னலோர இருக்கை, பக்கவாட்டு இருக்கை என நீங்கள் விரும்பும் சீட் உங்களுக்கு கிடைக்காது. பயணிகளுக்கான சீட் ஒதுக்கீடு என்பது தானியங்கி முறையில் ரயில்வேயால் செய்யப்படுகிறது.
விதிமுறைகள்
கீழ் பெர்த் என்பது கர்ப்பிணிப் பெண்கள், உடல் உபாதை உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில், ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது.
மிடில் பெர்த்தில் இருக்கும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடியும். அதைத் தாண்டி தூங்கினால் சக பயணிகள் புகார் செய்யலாம். காலை 6 மணிக்குப் பிறகு மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த்தை மடக்கி வைக்க வேண்டும்.
அதேபோல, இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய பிறகு யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. டிக்கெட் பரிசோதகர் கூட டிக்கெட் பரிசோதனைக்காக அந்த நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது.
இரவு 10 மணிக்கு மேல் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.