இந்திய கோடீஸ்வரரின் மகள்; உகாண்டா சிறையில் அடைப்பு - சாப்பாடு கொடுக்காமல் கொடூரம்!
இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் ஒருவரின் மகள் உகாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வசுந்தரா ஓஸ்வால்
இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வாலின் மகள் வசுந்தரா ஓஸ்வால்(26). இவர் கடந்த ஆண்டு உகாண்டாவில் இருந்தபோது அங்குக் கொலை வழக்கு ஒன்றில் சுமார் 3 வாரங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.
இவர் மீது ர் தனது தந்தையின் முன்னாள் ஊழியரைக் கடத்தி கொலை செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. விசாரணையில், அந்த முன்னாள் ஊழியர் தான்சானியாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். இதன்பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
வசுந்தரா ஒஸ்வால் சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். $200 மில்லியன் மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த வில்லாவில் தான் வசித்து வந்தார். படிப்பிற்கு பின் PRO இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவராக பணியில் இணைந்தார்.
சிறையில் கொடூரம்
தற்போது பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக (நிதி) பணியாற்றுகிறார். சிறையில் இருந்தது குறித்து பேசிய வசுந்தரா, "என்னை முதலில் 5 நாட்கள் தடுப்பு காவலில் வைத்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்கள் சிறையில் அடைத்தனர். அப்போது மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டனர்.
அவர்கள் என்னைக் குளிக்க அனுமதிக்கவில்லை.. எனக்கு உணவு மற்றும் தண்ணீர் கூட தரவில்லை. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தரக் கூட என் பெற்றோர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில், தண்டனை கொடுக்கும் விதமாகக் கழிவறையைப் பயன்படுத்தக் கூட அனுமதிக்கவில்லை.
கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதியே கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், என்னை அவர்கள் வெளியேறவிடவில்லை. ஏதேதோ சொல்லி சிறையிலேயே வைத்திருக்கப் பார்த்தனர். நான் ரிலீஸ் ஆன பிறகும் சுமார் 1.5 மாதங்கள் வரை பாஸ்போர்ட் தரவில்லை.
அதன் பிறகே பாஸ்போர்ட் கொடுத்தனர். எங்களிடம் இருந்து முடிந்த வரை பணத்தைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இதுபோல ஏதேதோ சொல்லி வழக்கைத் தாமதப்படுத்தினர்" என வேதனை தெரிவித்துள்ளார்.