வார்னரையும் விட்டுவைக்கல! ஓயாத இந்திய ரசிகர்களின் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் - வைரலாகும் Video!
ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னரை நோக்கி, இந்திய ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் செயல்கள்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடந்து முடிவடைந்துள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்த உலகக்கோப்பை போட்டிகளின் போது இந்திய ரசிகர்களின் செயல்கள் பலரை முகம் சுளிக்கும்படி செய்தது.
மைதானத்தில் மற்ற நாட்டு அணி வீரர்கள் விளையாடும்போது 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் எழுப்பி அவர்களை இடையூறு செய்வது, பாகிஸ்தான் ரசிகர்களை, அவர்கள் நாட்டு அணியையே உற்சாகப்படுத்த விடாமல் செய்வது போன்ற செயல்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
ஜெய் ஸ்ரீராம் கோஷம்
அப்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பும்போது இந்திய ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அது மட்டுமா, பிரபல அமெரிக்க யூடியூபரான 'ஸ்பீட்' என்று அறியப்படும் 'டேரன் ஜேசன் வாட்கின்ஸ்' என்பவரிடம் 'கணபதி பாப்பா' என கூறச் சொல்லியுள்ளனர். தற்போது, உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றபோதும் கூட விடவில்லை. அந்த அணி வீரர்களின் மனைவிகளை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர் .
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர் 'டேவிட் வார்னர்' மைதானத்தில் விளையாடும்போது, அவரை விளையாட்டில் கவனம் செலுத்த விடாமல் இந்திய ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பவது போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், சத்தமாக ரசிகர்கள் கோஷாம் எழுப்பும்போது, டேவிட் வார்னர் "கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்று கூறுகிறார். அப்போதும் அவர்கள் விடாமல் கோஷம் எழுப்புகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
This video is reminds me when we have come so insensitive and insecure for our gods.
— savvy (@thesavvyguy_) November 21, 2023
David warner has nothing to do with religion still people were chanting Jai Shri Ram.
pic.twitter.com/oD2mfU3uur