பின்லாந்து ரயிலில் இந்திய குடும்பம் செய்த மோசமான செயல் - வலுக்கும் எதிர்ப்பு!

Finland Railways
By Sumathi Dec 27, 2024 04:30 PM GMT
Report

பின்லாந்து ரயிலில் இந்திய குடும்பத்தினர் செய்த செயல் கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது.

ரயில் பயணம்

பின்லாந்து நாட்டின் லாப்லாண்டில் இருந்து ஹெல்சின்கிக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அதில் பயணித்த கோகுல் ஸ்ரீதர் என்ற எக்ஸ் பயனர் ஒருவர்

finland train

பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாதா என சக நாட்டு மக்களை விமர்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில், "நான் லாப்லாண்டிலிருந்து ஹெல்சிங்கிக்கு ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன்.

Non Veg சாப்பிடக்கூடாது; தடை செய்த உலகின் முதல் நகரம் - இந்தியாவில்தான் தெரியுமா?

Non Veg சாப்பிடக்கூடாது; தடை செய்த உலகின் முதல் நகரம் - இந்தியாவில்தான் தெரியுமா?

இந்திய குடும்பத்தின் செயல் 

அதுவரை எந்தவித சத்தமும் இன்றி மிகவும் அமைதியாக ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் இன்னொரு இந்தியக் குடும்பமும் பயணித்தது. அவர்கள் தங்கள் போனில் வீடியோ கால் மூலம் யாரிடமோ மிகவும் சத்தமாக ஹிந்தியில்ல் பேசிக் கொண்டு வந்தனர்.

பொது இடங்களில் எபடி நடந்துகொள்ள வேண்டும் என்றே நமக்கு தெரியவில்லை. அப்படிதானே?” என்றுக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், டோக்கியோ மெட்ரோவில் தொலைபேசியில் பேசுவது எப்படி மோசமான பழக்கவழக்கமாக இருக்கிறது என்பதைப் பற்றிய வீடியோவை தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு சோசியல் மீடியாவில் உடனடியாக வைரல் ஆனது. பல பயனர்களும் தங்களுக்கும் இதே போல் நடந்த அணுபவங்களை கமெண்டுகளில் குவித்த வண்ணம் உள்ளனர்.