பென்குயின் செய்த செயல்; வெட்கத்தில் திகைத்த ஜோடி - லைக்ஸை அள்ளிய வீடியோ!
காதல் ஜோடியை பென்குயின் வியக்க வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பென்குயின் செயல்
அண்டார்டிக் பனிக்கட்டிகள் நிறைந்த மலைச்சிகரத்தில் ஒரு காதல் ஜோடி கட்டிப்பிடித்து தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த பென்குயின் அவர்கள் இருவரும் பாதையில் நின்றதை பார்த்துவிட்டு அப்படியே நிற்கிறது. தொடர்ந்து அவர்களை தொந்தரவு செய்யாமல் அதே இடத்தில் காத்திருந்துள்ளது. ஆனால் இதனை அந்த ஜோடி அறிந்திருக்கவில்லை.
சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கையில் பறவை பார்த்துள்ளனர். பின் உடனே பாதையை விட்டு விலகியுள்ளனர். இதனையடுத்து பென்குயின் பறவை நடந்து சென்று அவர்களைக் கடந்து போனது. இதுகுறித்த வீடியோ ciera.ybarra என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ
இந்த பெண் பனிச்சறுக்கு விளையாட்டிலும் பனிமலை ஏற்றத்திலும் ஆர்வம் கொண்ட விளையாட்டு வீரர் எனத் தெரிகிறது. அது தொடர்பாகப் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது 141 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் பயணம் குறித்து ciera.ybarra,
"கடந்த சில வாரங்கள் எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருந்தன! நான் படகோனியாவைச் சுற்றி நடைப்பயணம் செய்து அண்டார்டிக்காவை ஆராய்ந்தேன். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பயணத்தை மேற்கொண்டேன். அதற்கு மேல், எனது வீடியோக்களில் ஒன்று தற்செயலாக வைரலானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.