Sunday, May 11, 2025

Non Veg சாப்பிடக்கூடாது; தடை செய்த உலகின் முதல் நகரம் - இந்தியாவில்தான் தெரியுமா?

Gujarat India
By Sumathi 4 months ago
Report

இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த நகரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இறைச்சிக்கு தடை

குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் பாலிதானா. இது ஒரு முக்கிய ஜைன புனித யாத்திரை ஸ்தலமாக அறியப்படுகிறது.

palitana

அசைவ உணவை அதிகாரப்பூர்வமாக தடை செய்த உலகின் முதல் நகரமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஜெயின் சமூகத்தின் மதக் கொள்கைகளை மதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தடையை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகம் பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம் இதுதான்!

இந்தியாவிலேயே அதிகம் பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம் இதுதான்!

பாலிதானா

அந்த வகையில் நகரத்தில் உள்ள சுமார் 250 இறைச்சிக் கடைகளை மூடக் கோரிய 200க்கும் மேற்பட்ட ஜெயின் துறவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி, இறைச்சி மற்றும் முட்டை விற்பனையையும் தடை செய்யும் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

Non Veg சாப்பிடக்கூடாது; தடை செய்த உலகின் முதல் நகரம் - இந்தியாவில்தான் தெரியுமா? | Non Veg Meat Is Prohibited Worlds First City Info

இதனையடுத்து மேலும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சைவ உணவகங்கள் உருவாகியுள்ளன. இந்த தடை நகரத்தின் சுற்றுலா யுக்தியை மேம்படுத்தியுள்ளது.

இருப்பினும், உணவுத் தேர்வுகள் மீதான கட்டுப்பாட்டை எதிர்க்கும் மற்றவர்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.