2023 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்; இந்த 5 காரணம் இருக்கு - என்னென்ன தெரியுமா?
2023 உலகக்கோப்பைக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களைடையே தீவிரமாக உள்ளது.
உலகக்கோப்பை 2023
2023 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளது.
உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், எந்த அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை கொண்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்திய அணி
இந்திய அணியை பொருத்தவரை, ரோஹித் சர்மா இதுவரை ஆடிய பெரிய தொடர்களில் எல்லாம் தன் கேப்டன்சியை நிரூபித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி என மூவரும் தங்களின் சிறந்த ஃபார்மில் உள்ளனர். தற்போது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளில் சில அணிகளில் மட்டுமே அதிக ஆண்டுகள், அதிக போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் ஆடிய வீரர்கள் உள்ளனர்.
அதில் இந்தியா முன்னணியில் உள்ளது. ழற் பந்து வீச்சாளர்களில் முதல் மூன்று இடங்களில் குல்தீப் யாதவ் பெயர் நிச்சயம் இடம் பெறும். அடுத்து ஜடேஜா மற்றும் அஸ்வின் இருக்கிறார்கள். மூவரும் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் வீரர்களாக இருப்பார்கள்.
அடுத்து 2019இல் இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த அணி அப்போது உலகக்கோப்பை வென்றது. தற்போது மீண்டும் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது.