2019 உலகக்கோப்பை; வேண்டுமென்றே தோற்கவைத்த தோனி - பிரபல வீரரின் தந்தை பகீர்!

MS Dhoni
By Jiyath Jul 13, 2023 11:31 AM GMT
Report

2019 உலகக்கோப்பையில் தோனி வேண்டுமென்றே தான் நன்றாக விளையாடவில்லை என்று யோக்ராஜ் சிங்க் பேசிய வீடியோ மீன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உலகக் கோப்பை தோல்வி

மகேந்திர சிங்க் தோனி இந்திய அணியின் ஈடு இணலியில்லாத முன்னாள் கேப்டன் ஆவார். இரண்டு உலகக் கோப்பைகள், ஒரு ஐசிசி கோப்பை என மொத்தமாக மூன்று கோப்பைகளை இந்த அணிக்கு பெற்றுத்தந்த உலகின் ஒரே ஒரு கேப்டன் என்று அறியப்படுகிறார்.

2019 உலகக்கோப்பை; வேண்டுமென்றே தோற்கவைத்த தோனி - பிரபல வீரரின் தந்தை பகீர்! | Dhoni Says Should Not Win World Cup 90 Ibc

இவருக்கு மக்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் அணி வீரர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தியது விராட் கோலிதான்.

அதில் தோனி ரன் அவுட் ஆகினார் . அதுதான் தோனியின் கடைசி ஆட்டமாகவும் இருந்தது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்க் சில வருடங்களுக்கு முன் தோனி குறித்து அவதூறாக பேசிய ஒரு வீடியோ மீண்டும் இணையத்தில் வளம் வருகிறது.

தோனி மீது குற்றச்சாட்டு

அந்த வீடியோவில் அவர் "தோனி வேண்டுமென்றே தான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. ஏனென்றால் அவரைத் தவிர மற்ற எந்த கேப்டன்களும் உலகக்கோப்பையை வெல்வது அவர் விரும்பவில்லை.

2019 உலகக்கோப்பை; வேண்டுமென்றே தோற்கவைத்த தோனி - பிரபல வீரரின் தந்தை பகீர்! | Dhoni Says Should Not Win World Cup 90 Ibc

ஒரு முனையில் அபாரமாக விளையாடி ஜடேஜா இலக்கை நெருங்கி இந்திய அணிக்கு உதவி செய்தார். ஆனால் தோனி தனது திறமைக்கேற்ப விளையாடவில்லை. அவரின் திறமையில் 40 சதவிகிதம் வெளிப்படுத்தியிருந்தால் 48-வது ஓவரிலேயே இந்திய அணி உலகக்கோப்பை வென்றிருக்கலாம் என்று அவர் பேசியிருக்கிறார்.

அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கும் இந்த நிலையில் யோக்ராஜ் சிங்க் பேசிய இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியுள்ளன.