ரோகித் சர்மா தலைமையிலான உலகக்கோப்பை இந்திய அணி அறிவிப்பு....!!
நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடர்
இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்டோபர் 5-இல் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதவுள்ளன.
இந்திய அணி தனது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்தியா -பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் 14-ஆம் தேதி ஞாயிறு அன்று அகமதாபாத் மைதானத்தில் சந்திக்கவுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை துவங்கி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன் பட்டேல் சூர்யகுமார் யாதவ்.